108 திவ்ய தேசம் ஒரே இடத்தில் உள்ளடக்கிய ஆலய மாஹா கும்பாபிசேகம் சிறப்பாக நடைபெற்றது
108 திவ்ய தேச ஒரே ஆலயத்தினுள் உள்ளடக்கி அஷ்டபந்தன மாஹா கும்பாபிசேகம். செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.
செங்கல்பட்டு அடுத்த திருவடி சூலம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ புமி நீளா ஸ்ரீ அலர்மேல்மங்கா ,கோதா தேதி ஸமேத ஸ்ரீ வாரு வேங்கடாஜலபதி பெருமாள் ஆலயதி்ல் 108 திவ்விய தேசங்களின் பெருமான்களின் சிலைகள் ஒரே இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஸ்ரீ புண்ணியகோடி மதுரைமுத்து சுவாமிகள் தலைமையில் மஹா கும்பாபிசேகம் நடைபெற்றது. இதில் செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் கடம்புர் ராஜூ பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.அப்போது காஞ்நிபுரம் மத்திய மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம்,அம்மா பேரவை செயலாளர் ஆனூர்.வீ.பக்தவச்சலம்,காட்டாங்கொளத்தூர் ஒன்றிய கழக செயலாளர் கௌவுஸ்பாஷா, செங்கல்பட்டு நகர செயலாளர் வீ.ஆர்.செந்தில்குமார் ஆகியோர் உள்பட பலர் உடனிருந்தனர்.
முன்னதாக காடந்த ஞாயிற்றுகிழமை மாஹா ஸீதர்சனஹோமங்கள்,வேத பாராயணம் தொடங்கப்பட்டு வாஸ்து சாந்தி,அக்நி பிரதிஷ்டை, கும்ப ஆவாஹாணம் செய்யப்பட்டு யாகசாலை பிரவேசம் நடைபெற்றது.தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு ஹோமங்கள் நடைபெற்றது.வியாழன் காலை சுப்பிரபாரதத்துடன் துவங்கிய புஜைகள் நித்திய ஹோமம் செய்யப்பட்டு திவ்ய பிரபந்த இதிகாச க்ராந்த பாராயணங்களுடன் மாஹா புர்ணாஹூதி செய்யப்பட்டு கும்ப கலசம் மங்கள வாத்தியங்கள் முழங்க வேத மந்திரங்களுக்கிடையில் யாகசாலையிலிருந்து கும்ப கலசங்கள் புறப்பட்டு அனைத்து கோபுர கலசங்கள் மற்றும் சந்நிதிகளிலும் கலச புனித நீர் தெளிக்கப்பட்டு கும்பாபிசேகம் நடைபெற்றது.
இதில் காஞ்சிபுரம் மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து 10000 க்கும் மேற்பட்ட பக்கதர்கள் கலநது கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
.